தமிழக பட்ஜெட் 2023: விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டி சொன்ன 2 விஷயங்கள்!

தமிழக பட்ஜெட் 2023 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி ரவிக்குமார் பேட்டி

இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதி

எம்.பி ரவிக்குமாரிடம் ’சமயம் தமிழ்’ சார்பாக பேசினோம். அதற்கு அவர், ஆதி திராவிடர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தில் பாகுபாடு காட்டப்பட்டு பொதுப் பள்ளிகளில் சேர்ந்து பயில முடியாத சூழலில் அவர்களுக்கு என்று தனியாக பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தற்போது அத்தகைய பாகுபாடு காட்டக்கூடாது என்றும்,

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள்

அப்படி காட்டினால் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த சமூகத்தினருக்கு தனியாக பள்ளிகள் நடத்துவது அவர்களை மேலும் புறக்கணிப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் தரம் மிகவும் குறைவாக இருப்பது கண்கூடாகவே தெரிகிறது. மருத்துவப் படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ்

இதனை ஆதி திராவிடர் பள்ளி மாணவர்களை இதுவரை பெற முடியவில்லை. எனவே இந்தப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வர தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் கோரிக்கை விடுத்தார். அதன் விளைவாக தற்போது அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அம்பேத்கர் நூல்கள் மொழிபெயர்ப்பு

இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதையடுத்து அண்ணல் அம்பேத்கரின் நூல்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக அம்பேத்கரின் நூல்களை மொழி பெயர்க்கும் திட்டம் மத்திய அரசிடம் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படியே முடக்கப்பட்டது.

முதல்வருக்கு நன்றி

இதற்கான நிதி ஒதுக்கீடு முழுவதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் திமுக எம்.பி ஆ.ராசா அவர்கள் அம்பேத்கரின் நூல்கள் தமிழ் மொழியில் வெளியிட அறிவுறுத்தினார். தற்போது தமிழ்நாடு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தியுள்ளது.

இதனை நிரந்தர திட்டமாக வைத்து புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களை தொடர்ந்து தமிழ் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த இரண்டு அறிவிப்புகளுமே பாராட்டுத்தக்க அறிவிப்புகள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.