பிரிட்டனில் பதற்றம்! இந்திய கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்… இந்தியா கடும் கண்டனம்!

இந்தியாவில்  காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், காவல்துறையினரால் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை அகற்ற முயன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பிரிட்டன் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய தூதரகத்திற்கு வெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​இவர்கள் ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பியதோடு, அத்துமீறல்களையும் மேற்கொண்டனர்.

வெளியுறவு அமைச்சக அறிக்கை

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசு அலட்சியமாக இருப்பதை இந்தியா தீவிரமாக கவனத்தில் கொள்கிறது; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் இந்திய தூதர் அலெக்ஸ் எல்லிஸ் டெல்லியில் இல்லை என்பதால், பிரிட்டிஷ் துணை உயர் தூதர் கிறிஸ்டினா ஸ்காட், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டதாக  வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டிஷ் தூதர்களிமிருந்து கோரப்பட்ட பதில் 

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக புதுதில்லியில் உள்ள மூத்த பிரிட்டன் தூதரக அதிகாரி இன்று மாலை வரவழைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில், பிரிவினைவாதிகள் இந்திய தூதரகத்திற்குள் நுழைந்தன என்று கூறிய இந்தியா, இங்கிலாந்திடம் விளக்கம் கோரப்பட்டது. வியன்னா உடன்படிக்கையின் கீழ் இங்கிலாந்து அரசாங்கத்தின் அடிப்படைக் கடமைகளை ராஜதந்திரி நினைவுபடுத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | விளாடிமிர் புடின் உலகின் ‘இந்த’ 123 நாடுகளில் அடியெடுத்து வைத்தால் கைது: ICC

உடனடி கைது தேவை

காலிஸ்தான் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, கைது செய்து, வழக்குத் தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகம் கோரியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, கைது செய்து விசாரணை நடத்த இங்கிலாந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்ஷ் தூதரின் ட்விட்டர் பதிவு

எல்லிஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘லண்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்திற்கும் அங்குள்ள மக்களுக்கும் எதிரான இன்றைய இழிவான செயல்களை நான் கண்டிக்கிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடைந்த ஜன்னல்கள் மற்றும் ‘இந்தியா ஹவுஸ்’ கட்டிடத்தின் மீது பலர் ஏறுவதை வீடியோவில்காணலாம். இந்திய தூதரகத்தின் முதல் மாடி ஜன்னலில் இருந்து இந்திய அதிகாரி ஒரு எதிர்ப்பாளரிடமிருந்து ஒரு கொடியைப் பிடுங்குவதை காட்சியில் இருந்து வீடியோ காட்டுகிறது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர் காலிஸ்தான் கொடியை அசைப்பதைக் காணலாம். லண்டன் போலிஸ் ‘ஸ்காட்லாந்து யார்டு’ பிரிவுக்கு அப்பகுதியில் ஒரு சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

மேலும் படிக்க | காய்கறிகள் கிடைக்காமல் தவிக்கும் பிரிட்டன் மக்கள்! கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.