TN Budget 2023: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இலவச WiFi சேவை வழங்கப்படும்!

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த 2023-2024 நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை, மதுரை, தாம்பரம், ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் விரைவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய Public WiFi சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு பகுதியாக பொதுமக்கள் பயன்படுத்த Wifi வசதி அமைக்கப்படும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த புதிய WiFi பற்றிய அறிவிப்பு நிச்சயம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இணையத்தளம் மூலமாக பணப்பரிவர்த்தனை, வணிகம், பொழுதுபோக்கு என அனைத்தும் வந்துவிட்டது. இது இல்லாமல் மக்களின் வாழ்வு தற்போது கடினமாக மாறும் சூழல் இருப்பதால் தமிழ்நாடு அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தவிர சென்னை, ஓசூர், கோவை போன்ற நகரங்கள் டெக்னாலஜி நகரங்களாக மாற்றவும் தமிழ்நாட்டை உலகில் இருக்கும் முக்கிய IT இடமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.