மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்! காலை, மாலை நடக்கும் பூசை..ஆச்சரியத்தில் மக்கள்

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி ஈஸ்வரி.

இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி ஈஸ்வரி கடந்த ஆண்டு காலமானார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சுப்பிரமணி, அவரின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்! காலை, மாலை நடக்கும் பூசை..ஆச்சரியத்தில் மக்கள் | Man Made Temple For His Wife Tamil Nadu

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஆறடியில் மனைவிக்கு சிலை

அதன் பின்னர் ஆச்சரியமான விடயம் ஒன்றை செய்தார். அதாவது தனது 15 சென்ட் இடத்தில் மனைவிக்காக அவர் கோயில் கட்டியுள்ளார். அதில் 6 அடியில் மனைவிக்கு சிலை வைத்துள்ளார்.

மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்! காலை, மாலை நடக்கும் பூசை..ஆச்சரியத்தில் மக்கள் | Man Made Temple For His Wife Tamil Nadu

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இதற்காக அவர் 15 லட்சம் செலவு செய்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதி மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதால், 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க உள்ளார் சுப்பிரமணி.

மனைவிக்காக கோயில் கட்டி தினமும் வழிபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்! காலை, மாலை நடக்கும் பூசை..ஆச்சரியத்தில் மக்கள் | Man Made Temple For His Wife Tamil Nadu

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.