தேர்தல் ஸ்கெட்ச்: 4 மாநிலங்களில் பாஜக அதிரடி… புதிய தலைவர்கள் நியமனம்!

டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை இன்று (மார்ச் 23) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மூன்று மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக அதிரடி

இதுதொடர்பான பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்லி பாஜகவின் செயல் தலைவராக இருந்த விரேந்திர சச்தேவா அம்மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக சி.பி.ஜோஷி அவர்களை நியமித்துள்ளது. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கவனிக்கத்தக்கது.

4 மாநிலங்களில் மாற்றம்

இம்மாநிலத்தில் மூத்த பாஜக தலைவராக இருந்தவர் குலாப் சந்த் கடாரியா. இவர் அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தானில் வெற்றிடம் ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. அதனை நிரப்பும் வகையில் தான் சி.பி.ஜோஷியை நியமினம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிராமண சமூகத்தை சேர்ந்த ஜோஷி சிட்டோர்கர் மக்களவை தொகுதியில் இரண்டாவது முறை எம்.பியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநில தலைவர்

ஏற்கனவே ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக சதிஷ் பூனியா இருந்தார். ஜெய்ப்பூரின் ஆம்பர் தொகுதி எம்.எல்.ஏ ஆவார். இவருக்கு பதிலாக தான் தற்போது ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிகார் மாநிலத்திற்கு மேலவை உறுப்பினராக இருக்கும் சாம்ராட் சவுத்ரியை தலைவராக நியமனம் செய்துள்ளனர். இவர் 2018ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

குஷ்வாகா சமூகம்

அப்போது முதல் கட்சியில் இவருக்கான செல்வாக்கு தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இவர் குஷ்வாகா சமூகத்தை சேர்ந்தவர். இது பிகார் மாநிலத்தில் மிகப்பெரிய சமூகமாக பெரும்பாலான விவசாயிகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. எனவே இந்த சமூக வாக்குகளை அடுத்து வரும் தேர்தலில் கைப்பற்ற சாம்ராட் சவுத்ரியின் நியமனம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கணக்கு

அதுமட்டுமின்றி ஒடிசா மாநிலத்திற்கு முன்னாள் அமைச்சர் மன்மோகன் சாமல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் இரண்டு கணக்குகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல். மற்றொன்று அதற்கு முன்னதாக நடக்கும் சட்டமன்ற தேர்தல். மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.

ஆட்சி மாற்றம்

தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வலிமையான பாஜக தலைவராக திகழ்கிறார். இவர் மீண்டும் முதல்வராக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி பாஜகவின் வெற்றி வாய்ப்பிற்கு புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.