கன்னியாகுமரி, இரணியல் நீதிமன்ற கழிவறையில் கைதி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் கைதான நபர் கழிவறைக்கு செல்வதுபோல் சென்று, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், மருத்துவமனையில் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியில் நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு விசாரணைக் கைதி ராஜன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த கொலை வழக்கு விசாரணைக் கைதி ராஜன், இன்று இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப்பட்டர்.
அப்போது கைதி ராஜன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவலர் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் ராஜன் சென்றார்.
அப்போது ராஜன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தடுக்க முயன்ற காவலர் சுகு சுந்தருக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.