எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்ற அஜித் நடிப்பில் சமீபத்தில் துனிவு திரைப்படம் வெளியானது. வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் தன் 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் விக்னேஷ் சிவனை படத்திலிருந்து நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனியை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Rajini: உயிரை காப்பாற்ற உதவும் ரஜினி..சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார் தான்பா..!
மேலும் அஜித் விரைவில் பைக் டூர் செல்லயிருப்பதால் இப்படத்தை சீக்கிரமாக முடித்துவிட திட்டமிட்டுள்ளார். இதையடுத்து விக்னேஷ் சிவன் விஷயத்தில் ஏற்பட்ட தவறு இம்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக அஜித் மிகவும் கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகின்றார். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு பல கண்டிஷன்களை போட்டு வருகின்றார் அஜித்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இது அஜித்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும், ரசிகர்களும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் அஜித் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கே அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.
இதையடுத்து AK62 படவேலையை துவங்கி விறுவிறுப்பாக முடிக்க தயாரானார் அஜித். இந்த சமயத்தில் அவரின் தந்தை காலமானதால் உச்சகட்ட சோகத்திற்கு ஆளானார் அஜித். இந்நிலையில் அஜித் அவரின் வாழ்க்கையில் தைரியமாக பல முடிவுகளை எடுத்தாலும் அதற்கெல்லாம் பக்கபலமாக இருந்து அஜித்திற்கு துணையாக இருந்துள்ளார் அவரின் தந்தை.
சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிப்பு, பைக் என அஜித் சென்றாலும் அதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவரை வழிநடத்தினார் அஜித்தின் தந்தை சுப்ரமணி. இவ்வாறு அஜித்திற்கு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நண்பராகவும் இருந்து அவரை வழிநடத்திய தந்தையின் பிரிவை அஜித் எவ்வாறு ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.
மேலும் அஜித் தன் குடும்பத்தை பற்றி அவ்வளவாக பேசியதில்லை என்றாலும், அவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றும், நானும் ஒரு தமிழன் தான் என்றும் அஜித் ஒரு பேட்டியில் பேசியிருப்பார். தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். திரையுலகினரும், ரசிகர்களும் அஜித்தின் தந்தையின் பிரிவையொட்டி சோகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.