தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்

தருமபுரி: அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது.

தருமபுரி அருகே திருப்பதி என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட கோழிப்பண்ணையில் 5,000 கோழிகளை  வளர்த்து வந்துள்ளார். இன்று அதிகாலையில் பண்ணையின் மேல் இடி தாக்கியதால் பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

இதை கண்ட திருப்பதியின் சகோதரர் பதறியடித்து ஒட்டி சென்று தனது தம்பி திருப்தியிடம் பண்ணை தீ பிடித்தது பற்றி தெரிவித்துள்ளார். திருப்பதி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

திருப்பதியின் அண்ணன் மகன் பிரபு என்பவர் அரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பண்ணையில் இருந்த 5,000 கோழிகள் தீயில் எரிந்து நாசமாகின.

பண்ணையில் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டுவதனர். கோழிகள் அனைத்தும் எரிந்து தீயில் கருகியதால் தங்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது என திருப்பதி கவலை தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.