ஆப்கானிஸ்தானை உருக்குலைத்த கனமழை, வெள்ளம்- 3 பேர் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் பலியானதுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.