Samantha:யாரையாவது காதலிக்கச் சொன்ன ரசிகை: சமந்தா பலே பதில்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து இருவரும் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்கள், வெப்தொடர் என கெரியரில் பிசியாக இருந்து வருகிறார் சமந்தா. குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.

ஹைதராபாத், மும்பையில் சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார். மேலும் பேட்டிகளும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தயவு செய்து யாரையாவது டேட் செய்யவும் என ரசிகை ஒருவர் ட்விட்டரில் தெரிவித்தார். அதை பார்த்த சமந்தா கூறியிருப்பதாவது, உங்களை போன்று யார் என் மீது அன்பு வைப்பார்கள் என்றார்.

சமந்தா அளித்த பதில் அவரின் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

உங்களை டேட் செய்ய விண்ணப்பம் ஏது உண்டா, இருந்தால் விண்ணப்பிப்போம். லவ் யூ சாம்.

தயவு செய்து யாரையும் காதலிக்க வேண்டாம் சமந்தா. நீங்கள் ஏற்கனவே நிறைய வேதனை அனுபவித்துவிட்டீர்கள். எங்களை போன்று உங்கள் மீது வேறு யாராலும் அன்பு காட்ட முடியாது. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.

காதல் அதுவாக வந்தால் வரட்டும். தற்போதைக்கு டேட்டிங் எல்லாம் வேண்டாம். பட்ட கஷ்டம் போதும் என தெரிவித்துள்ளனர்.

Samantha: நடிகர் தேவ்மோகனுடன் காவல் தெய்வமான பெத்தம்மா கோவிலுக்கு சென்ற சமந்தா

முன்னதாக சாகுந்தலம் பட ப்ரொமோஷனை துவங்கும் முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் சமந்தா.

அவர் தற்போது ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார். சாகுந்தலம் பட ப்ரொமோஷன்ஸுக்காக ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சிடாடல் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக்கிறார். வருணும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கிறார்கள். ப்ரியங்கா சோப்ரா நடித்திருக்கும் சிடாடல் ஹாலிவுட் தொடரின் இந்திய ரீமேக்கில் தான் சமந்தா நடித்து வருகிறார்.

சிடாடல் தொடரில் ஆக்ஷன் காட்சிள் அதிகம். அதில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்து வருகிறார். அப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது கையில் காயம் ஏற்பட்டதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்தார் சமந்தா.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, உடம்புக்கு சரியில்லாத நேரத்தில் இந்த ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் தேவை தானா என கேள்வி எழுப்பினார்கள்.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார் சமந்தா. அதில் இருந்து குணமாகி வரும் அவர் இப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து காயம் அடைவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

Samantha:பழனி முருகனை தரிசித்த சமந்தா: நீங்க பண்ணது தப்புனு சொல்லும் ரசிகர்கள்

முன்னதாக தன் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்ய பழனி முருகன் கோவிலுக்கு சென்றார் சமந்தா. 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டார். இந்த நிலைமையில் படி ஏறிச் செல்வது தேவை தானா என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.