கனடாவில் மீண்டும் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்| Gandhi statue vandalized again in Canada: India condemns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஒட்டோவா: கனடாவில் இரண்டாவது முறையாக இன்று காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலை. வளாகத்தில் காந்தி சிலை உள்ளது. இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இன்று சேதப்படுத்தினர்.

இதே போன்று கடந்த வாரம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் 6 அடி உயர மஹாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி அட்டூழியம் செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் காந்தி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்திற்கு கனடா தூதரை தொடர்பு கொண்டு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.