டில்லியில் மாறுவேடத்தில் அம்ரித்பால் சிங் ?: சிசிடிவி காட்சி பதிவு| Amritpal Singh strolling in disguise in Delhi?: CCTV footage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி; காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் , டில்லியில் மாறுவேடத்தில் உலா வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

latest tamil news

அமிர்தசரஸ், ஹரியானா, புதுடில்லி உட்பட பல்வேறு இடங்களில், தன் அடையாளங்களை மாற்றியபடி சுற்றித் திரிந்த அம்ரித்பால் நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியான. அவர் வேறுநாடு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என நேபாள அரசை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் டில்லி போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில், தலையில் டர்பன் இல்லாமல், சன் கிளாஸ், டெனிம் ஜாக்கெட் அணிந்து டில்லியில் முக்கிய சாலையில் நடந்து செல்லுவதும், உடன் அவனது உதவியாளர் ஒருவனும் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி கடந்த 21-ம் தேதி பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் டில்லி போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஹரியானா போலீசார் கூறுகையில், கடந்த மாதம் நடந்த சம்பவத்தினையடுத்து அம்ரித்பால் சிங் குருக் ஷே த்ரா வழியாக டில்லி தப்பியோடியதாக கூறினர். இதை வைத்து அவர் டில்லியில் தான் எங்கோ பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.