பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – நடிகை ரிஹானா அட்வைஸ்

அழகு, சிப்பிக்குள் முத்து ஆகிய தொடர்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமானார் சின்னத்திரை நடிகை ரிஹானா. தற்போது ஆனந்தராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் விவகாரத்தின் போது அர்னவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து அர்னவின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் ரிஹானாவை தரக்குறைவாக பேசி தொந்தரவு செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பாதையில் தைரியமாக பயணித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து தனக்கு சோஷியல் மீடியாவில் நடந்த மோசமான நிகழ்வை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

'சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு வலை வீசும் சிலர் செண்டிமெண்ட்டாக பேசி மயக்குவார்கள், சிலர் பணத்தை காட்டி மயக்குவார்கள். அப்படி ஒருநபர் எனது நிர்வாண வீடியோவை அனுப்ப சொல்லியும், அந்தரங்க பாகங்களை காட்ட சொல்லியும், கேவலமான செயல்களை செய்து அதை வீடியோவாக அனுப்ப சொல்லியும் கேட்டார். அதற்கு 15 லட்சம் பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் யார் என்று தெரிந்துகொள்ளவும், சிக்க வைக்கும் பொருட்டும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அவர் சிக்கவில்லை'. எனவே, பெண்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ரிஹானா அட்வைஸ் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.