ஆவின் தயிர் பாக்கெட்டில் ஹிந்தி: உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அமைப்பு| Hindi on Aas Yogurt Packet: Center withdraws order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆவின் தயிர் பாக்கெட்டில் ‛தஹி’ என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட மத்திய அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் போன்று, கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு அவ்வமைப்பு கடிதம் அனுப்பியது. அதில், தயிர் பாக்கெட்களில் ‛தஹி’ என்ற ஹிந்தி சொல்லை பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது.

latest tamil news

இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின், ‛எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்!’ என எச்சரிக்கையுடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழகம் மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆவின் தயிரில் ஹிந்தியில் ‛தஹி’ என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.