திருப்பதி: கோடைகாலத்தில் குளு குளு ஆஃபர்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

திருப்பதிக்கு கோடை காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி

108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் வைணவ திருக்கோயில்களில், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் திருப்பதி கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், திருப்பதியில் எப்போது பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதிலும் கோடைகாலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசின் சாலை போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்

ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (ஏபிஎஸ்ஆர்டிசி) திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள், கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவான தரிசன டிக்கெட்டைப் பெறலாம்.

இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் APSRTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள்.

திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது. திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுளது.

அதிகரிக்கும் கொரோனா: அடுத்த மாதம் 2 நாள்கள் மட்டும்.. முடிவை அறிவித்த ஒன்றிய அரசு!

கோடைகால முன்னேற்பாடுகள்

முன்னதாக திருமலையில் கோடைக்கால முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பரிந்துரை கடிதங்கள் மூலம் விஐபி தரிசனம் மேற்கொள்ளும் வசதி மேற்குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்கு பெருமளவில் குறைக்கப்படும். இதன்மூலம் சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கும் விவகாரத்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்படும். தங்கும் விடுதி அறைகள் விஷயத்தில் வெளிப்படைத் தன்மை உடன் முகத்தை சரிபார்க்கும் தொழில்நுட்பம் (Face Recognition Technology) மூலம் உறுதி செய்யப்படும். இந்த அறைகளில் 85 சதவீதம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கபப்டும்.

10 ஆயிரம் இலவச டோக்கன்கள்

அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச திவ்ய தரிசன டோக்கன்கள் (Divya Darshan Tokens) வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு வருவோருக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படும்.

அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்; ராகுலுக்கு மேலும் ஒரு சிக்கல்.!

ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவானி, சுற்றுலா இடஒதுக்கீடு, ஆன்லைன் சேவை, 300 ரூபாய் தரிசன டிக்கெட் உள்ளிட்டவை சற்றே குறைக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.