பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்| Twitter Blocks Pakistan Government’s Official Account In India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை அடுத்து பாகிஸ்தான் அரசின் டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நீதிமன்றம் அல்லது முறையான சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதேபோல், கடந்தாண்டு ஜூன் மாதம் ஐ.நா சபை, துருக்கி, ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் பல அதிகாரப்பூர்வ கணக்குகளை டுவிட்டர் முடக்கியது.

latest tamil news

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான @GovtofPakistan, இந்தியாவில் முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் பாக்., அரசின் டுவிட்டர் கணக்கை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இரண்டாவது முறையாக பாக்., அரசின் கணக்கை இந்தியா முடக்கியுள்ளது. இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.