
பத்திரப்பதிவு கட்டண் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நாளை அமலுக்கு வருகிறது.
பத்திரப்பதிவுக் கட்டணம் குறைப்பு
நிலம் வாங்குவோருக்கு சுமையை குறைக்கும் வகையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனால் நிலம், வீடு வாங்கும் எளிய மக்கள் பயனடைவார்கள்.

ஆயுள் காப்பீடு வரி
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கொண்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் (Life insurance policy) இருந்து கிடைக்கும் பலன்களுக்கு நாளை முதல் வரி விதிக்கப்படும். எனினும், ULIP பாலிசிகளுக்கு வரி கிடையாது.

மின்னணு தங்க ரசீது
மின்னணு தங்க ரசீதுகளை (Electronic gold receipt) நிஜத் தங்கமாக மாற்றுவதற்கும், நிஜத் தங்கத்தை மின்னணு தங்க ரசீதாக மாற்றுவதற்கும் நாளை முதல் மூலதன ஆதாய வரி (Capital gains tax) கிடையாது.
திருத்தப்பட்ட வருமான வரித்தாக்கல்
2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது.
newstm.in