கொல்கத்தா: பொதுவாகக் கரகர குரல் ஏற்பட்டால் நாம் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால், அதுவே இந்த நபருக்கு மிக மோசமான பாதிப்பின் அறிகுறியாக இருந்துள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் நமக்கு பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்டு வந்த நோய்கள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதனிடையே மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஒருவர் கில்லர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டார். கில்லர் தாவர பூஞ்சை பாதிப்ப மனிதர்களுக்குக் கண்டறிவது இதுவே முதல்முறையாகும்.
கில்லர் பூஞ்சை
இந்த கில்லர் பூஞ்சை நோய் பாதிப்பு எப்போது தாவரங்களில் தான் இருக்கும். இது முதல்முறையாக இப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது. தாவர பூஞ்சைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்பு மனிதர்களுக்கு எப்படிப் பரவுகிறது என்பதை இது காட்டுவதாக உள்ளது. இது குறித்து மெடிக்கல் மைக்காலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் ஆய்விதழில் பல முக்கிய கருத்துகள் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வசிக்கும் 61 வயதான நபருக்கு இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரகர குரல்
அவரது குரல் சில நாட்களாகக் கரகரப்பானதாக மாறியுள்ளது. மேலும், அவருக்கு இருமல், சோர்வு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு அவருக்கு இந்த அறிகுறிகள் இருந்துள்ளது. மேலும், பசியின்மையையும் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு நீரிழிவு நோய், எச்.ஐ.வி தொற்று, சிறுநீரக நோய் உட்பட எந்தவொரு பாதிப்பும் இல்லை. இதனால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எதனால் அவருக்கு இதுபோல இருக்கிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், என்ன வேலை செய்கிறார் என்பது குறித்த தகவல்களைக் கேட்டுள்ளனர்.

எதனால் ஏற்படும்
அப்போது தான் அவர் ஒரு மைக்கோலஜிஸ்ட் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் நீண்ட காலமாக அழுகும் தவரங்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவர பூஞ்சைகளுடன் பணிபுரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக நீண்ட நேரம் அவர் பூஞ்சைகளுடன் செலவழிக்க வேண்டி இருந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்,”காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியம் என்பது தாவரங்களில், குறிப்பாக ரோஜா குடும்பத்தில் வெள்ளி இலை நோயை ஏற்படுத்தும் ஒரு தாவர பூஞ்சையாகும்.

கண்டறிவது சிரமம்
இந்த கில்லர் பூஞ்சை தான் இவருக்கு ஏற்பட்டது. பொதுவாகத் தாவரங்களில் ஏற்படும் இந்த பூஞ்சை பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுவது இதுவே முதல்முறை. முதலில் வழக்கமாக நாங்கள் நடத்திய எந்தவொரு சோதனையிலும் இது சிக்கவில்லை. வரிசைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த அசாதாரண நோய்ப் பாதிப்பை அடையாளம் காண முடிந்தது. தாவரங்களுக்கு இடையே ஏற்படும் பூஞ்சை பாதிப்பு மனிதர்கள் மத்தியில் ஏற்பட எந்தளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலேயே இந்தச் சம்பவம் உள்ளது.

கழுத்தில் ஆப்ரேஷன்
அழுகிப்போகும் பொருளைத் தொடர்ந்து கையாண்டு வந்தால், இந்த அரிய தொற்றுக்கு ஏற்படலாம். இந்த பூஞ்சை தொற்று மைக்ரோஸ்கோபிக் சோதனையில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நோய்த்தொற்றின் தன்மை, எப்படிப் பரவியது உள்ளிட்ட தகவல்களைக் கண்டறிய முடியவில்லை” என்றனர். அந்த நபரின் கழுத்தில் சீழ் கண்டறியப்பட்டு, அதை ஆப்ரேஷன் செய்து வெளியேற்றி, சிகிச்சை அளித்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை
அதன் பிறகு அவருக்கு நடத்தப்பட்ட எக்ஸ்ரேவில் எந்தவொரு அசாதாரண சூழலும் கண்டறியப்படவில்லை.. மேலும், அவருக்குப் பூஞ்சை காளான் மருந்துகளும் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் நோயாளி முற்றிலும் நலமாக இருந்தார். இப்போது அவர் நார்மலாக இருக்கும் நிலையில், மீண்டும் அவருக்குப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.