சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருது விழாவில் லியோ படம் குறித்த ஹாட் அப்டேட்டை வெளிப்படையாக சொன்னது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, சிம்பு, பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரேயா, ராஷி கன்னா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதில் பங்கேற்றனர்.
நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கிய லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஹாட் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பு
காஷ்மீர் ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்பிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து விருது விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். செல்லும் இடங்களிலெல்லாம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் நேற்று கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எழுந்து நின்று உற்சாக வரவேற்பை அளித்தனர்.

சிம்புவுக்கு விருது வழங்கினார்
பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், ராஷி கன்னா, மிருணாள் தாகூர், ஸ்ரேயா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கினார். வெந்து தணிந்தது காடு படத்தில் கடின உழைப்பு போட்ட நடித்த சிம்புவுக்கு விருது வழங்கப்பட்டது.

த்ரிஷா கிட்ட கேட்காதீங்க
நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவும் செம க்யூட்டாக கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது லியோ படம் எல்சியூவில் சேர்ந்ததா? என்கிற கேள்வியை மணிமேகலை மற்றும் கேபிஒய் பாலா எழுப்ப இப்போதைக்கு கேட்காதீங்க, என்கிட்ட மட்டுமில்லை, அடுத்து த்ரிஷா பேச வருவாங்க, அவங்க கிட்டேயும் கேட்காதீங்க, ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் எதையும் சொல்லக் கூடாதுன்னு பேசி வச்சிருக்கோம் என்றார்.

லியோ அப்டேட்
ஆனாலும், கேபிஒய் பாலா இயக்குநர் லோகேஷ் கனகராஜை சும்மா விடவில்லை. லியோ படத்தின் அப்டேட்டை நைஸாக பேசி கறந்து விட்டார். லியோ படத்தின் 60 நாள் ஷூட்டிங் தான் நிறைவடைந்துள்ளது என்றும் மேலும் 60 நாள் ஷூட்டிங் மீதமுள்ளதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹாட் அப்டேட்டை கூறினார்.
|
சிறப்பான ஆக்ஷன் படம்
மேலும், லியோ படம் சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் ரசிகர்களுக்கு செம அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான், கதிர் மற்றும் பிரியா ஆனந்த் என பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

லியோ பட கதை இதுதானா
காஷ்மீரில் தனது குடும்பத்துடன் ஜாலியாக இருந்து வரும் நடிகர் விஜய் பாம்ப் பிளாஸ்டில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழக்க, அதற்கு காரணமானவர்களை இரண்டாம் பாதியில் பழி வாங்குவது தான் லியோ படத்தின் கதை என சமூக வலைதளங்களில் ஒரு கதை உலா வருகிறது.

கெட்டப் சேஞ்ச்
60 நாள் படத்திற்கான கெட்டப் தான் இதுவரை விஜய் வெளிப்படுத்தியது என்றும் அடுத்த 60 நாள் ஷூட்டிங்கிற்கு நடிகர் விஜய்யின் தோற்றமே முற்றிலும் மாறுபடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னொரு லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படு சீக்ரெட்டாகவே வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.