இந்திய கடற்படையின் புதிய தலைமைப் பணியாளர் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி பதவியேற்றுக்கொண்டார்.
இதேபோல் கடற்படையின் புதிய துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் பதவியேற்றார். வைஸ் அட்மிரல் சதீஷ் குமார் நம்தியோ கோர்மடே மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜஸ்ஜித் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக ஜஸ்ஜித் சிங் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.