உக்ரைனைச் சாடும் கிம்-மின் சகோதரி | Vogue அட்டைப்படத்தில் 106 வயது மூதாட்டி! – உலகச் செய்திகள்

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் புயல் மற்றும் சூறாவளி தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருக்கிறது. மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டது. அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.

இரானின் நீதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி, `ஹிஜாப் அணியாத பெண்கள்மீது கருணை இல்லாமல் வழக்கு தொடரப்படும். ஹிஜாப்பை அகற்றுவது, நம் மதிப்புகளுடன் பகைமை வைத்துக் கொள்வதற்குச் சமம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க – கனடா எல்லையிலுள்ள ஆற்றில் 6 இந்தியர்கள் மற்றும் ரோமானியர்களின் சடலகள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆற்றைக் கடக்கும்போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜோங், உக்ரைன் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் இயக்கிய ரேடியோ ஸ்டேஷன், அந்த நாட்டு அதிகாரிகளால் மூடப்பட்டது. ரமலான் மாதத்தில் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘Vogue’ பத்திரிகையின் இந்த மாத அட்டைப் படத்தில் 106 வயது புகழ்பெற்ற ‘டாட்டு’ கலைஞர் அப்போ வாங்-ஓட் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். Vogue அட்டைப் படத்தில் இடம்பெற்ற மிகவும் வயதான பெண் இவரே.

நேபாளத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திர பவ்டெல் உடல்நலக் கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.