சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பெயர் பலகையில் உள்ள விளக்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
