திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆங்கில பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆங்கில ஆசிரியர் முருகன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆங்கில ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.