பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம், நுகர்வோர் தேவையில் சுணக்கம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்களில் சீனா சிக்கியுள்ளது.
எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. இதற்கு பல புதுமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு சீன அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா, மற்றொரு முயற்சியில் இறங்கி உள்ளது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிக்க முடிவு செய்யப்ப்டடது. அதன் படி நேற்று(ஏப்ரல் 01) முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை கல்லூரி மாணவர்கள் மாணவியிடம் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டது.

இதுபற்றி மியான்யாங் பிளையிங் கல்லூரியின் ஆசியர் கூறுகையில், இந்த விடுப்பு தினத்தில் மாணவர்கள் மாணவிகளுடன் பசுமை நிறைந்த இடத்திற்கு சென்று தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். விடுப்பு தினத்தில் மாணவிகளிடம் செலவிடும் நேரத்தை டைரி எழுதுதல், வீடியோ எடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் அவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை அதிகரிப்பதற்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement