சூடுபிடிக்கும் உக்ரைன் போர்: வீரர்களுக்கு வெடிமருந்துகளை வாரி வழங்க உத்தரவிட்ட ரஷ்யா


போரில் ரஷ்ய படைகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை வழங்க ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார்.


தீவிரமடையும் தாக்குதல்

உக்ரைனின் கிழக்கு எல்லை நகரங்களில் ஒன்றான பக்முத்-தை ரஷ்ய படைகள் கைப்பற்ற முன்னேறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய படைகளின் தாக்குதல் சற்று பின்வாங்கி இருந்த நிலையில், போர் நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்ததை தொடர்ந்து தாக்குதலை ரஷ்ய படைகள் வேகப்படுத்தி வருகின்றனர்.

சூடுபிடிக்கும் உக்ரைன் போர்: வீரர்களுக்கு வெடிமருந்துகளை வாரி வழங்க உத்தரவிட்ட ரஷ்யா | Munitions Supply Increase To Russian ForcesUS Marine Corps

பக்முத் நகரம் உக்ரைனிய படைகளுக்கு மூலோபாய அளவிற்கு முக்கியமானதாக இல்லை என்று ராணுவ வல்லுனர்கள் தெரிவித்து இருந்தாலும், ரஷ்ய படைகளிடம் பக்முத் நகரை இழப்பது என்பது புடினுடன் சமரசம் செய்து கொள்வதற்கு சமம் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


வெடிமருந்துகள்

இந்நிலையில் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படை வீரர்களுக்கான வெடிமருந்துகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergey Shoygu)சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் உக்ரைன் போர்: வீரர்களுக்கு வெடிமருந்துகளை வாரி வழங்க உத்தரவிட்ட ரஷ்யா | Munitions Supply Increase To Russian ForcesEPA

பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் படி, ரஷ்ய படைகளுக்கு மிகவும் தேவையான வெடி மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்பட்டது என்றும், அவற்றை அதிகரிக்க மாஸ்கோ நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

போர் முனையில் உள்ள வீரர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் விமர்சித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.