தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 16ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
மேலும், வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் எம்பி. எம்எல்ஏக்கள் இடம் கோரிக்கை மனு தர உள்ளதாகவும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிய நிலையில் அதுகுறித்த எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அரசு ஊழியர்கள் முன்வைத்து வருகின்றனர்.

மேலும், சம வேலைக்கு சம ஊதியம், இடைநிலை முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம் மதிப்பூதிய முறைகளை ஒழித்தல், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஊரக பகுதி செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் ஊராட்சி செயலர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு வலியுறுத்தி போராட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

மேலும், முடக்கப்பட்ட அகவிலைப்படி விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு எதிராக ஆளும் திமுகவின் ஆதரவு மனப்பான்மையில் உள்ளவர்களை கொண்டு, “அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பும் தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.