ராமநவமி பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை பயன்படுத்தி இத்துத்வா கும்பல், பாஜக தலைவரின் கடையையே கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரத்பிரதேச மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் சிலர் காவி கொடிகளை கட்டி வன்முறையை ஏற்படுத்தினர். அதே போல் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் மதரஸாவுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது பீகாரில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் மஹாராஷ்டிராவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹைதர் ஆசமின் ஷோரூம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான ஹைதர் ஆசம் பீகாரில் எலக்ட்ரானிக் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார். ராமநவமி நடந்த அன்று நடத்த வன்முறையில் இவருக்கு சொந்தமான இந்த ஷோரூமில் புகுந்த சிலர் கடையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அவரின் கடையில் இருந்த மொபைல் போன்களையும் தொலைக்காட்சி பெட்டிகளையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in