பிரித்தானிய இளவரசர் ஹரி போதைப்பொருட்களை பயன்படுத்திய நிலையில், அவர் எப்படி அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார் என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அமெரிக்க விசா தொடர்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க சட்டம்
அமெரிக்க சட்டத்தின்படி, அங்கு வசிக்க வருபவர்கள் அல்லது பணியாற்ற வருபவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, ”போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்தவரா அல்லது அதற்கு அடிமையாகி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என பதிலளிக்க விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இந்த நிலையில் இளவரசர் ஹரி, போதைப்பொருள் விடயத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறு அமெரிக்க விசா அதிகாரிகள் கோரியுள்ளனர்.
ஹரியின் சர்ச்சைக்குரிய நினைவுக் குறிப்பு
ஏனெனில், ஹரி தனது சர்ச்சைக்குரிய நினைவுக் குறிப்பான ஸ்பேரில் Psychedelic மருந்துகளை உட்கொண்டதாக கூறியிருந்தார்.
இதன் காரணமாக, கடந்த காலத்தில் மரிஜுவானா, கோகையின், மேஜிக் காளான்கள் உட்பட போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக ஹரி ஒப்புக்கொண்ட பிறகு, அவர் எப்படி மாகாணங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என, அமெரிக்காவின் think – tank குழு ஏப்ரல் 12க்குள் குடியேற்ற அதிகாரிகளுக்கு மனுதாக்கல் செய்துள்ளது.
ஹரியின் அமெரிக்க விசா விண்ணப்பம் குறித்த விவரங்களை வெளியிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.