மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

மன்னார்குடி: மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் உள்ள மன்று நகரில் 4 கிளைகளுடன் உள்ள தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் மன்று நகரில் சாலை ஓரம் தென்னை மரங்கள் உள்ளது. இதில் ஒரு தென்னை மரத்தின் தண்டிலிருந்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன் தேங்காய் காய்த்துள்ளது. இதே போல் மற்றொரு கிளை யில் இருந்து மற்றும் ஒரு கிளை முளைத்து, அதிலும் தேங்காய்கள் முளைத் துள்ளது. ஒரே தென்னை மரத்தில் 4 கிளைகள் முளைத்து அவற்றில் தேங்கா யும் முளைத்துள்ளது காண்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கான அறிவியல் காரணங்கள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், பொதுவாக தாவரங்களை ஒரு வித்திலை மற்றும் இரு வித்திலை தாவரங்கள் என்று வகைப்படுத்தலாம். அதில், நாம் பார்க் கக் கூடிய தென்னை மரமும் ஒரு வித்திலை வகையைச் சார்ந்தது, இது போன்று ஒரு வித்திலை மரங்களான பனை மற்றும் வாழை மரங்கள் இதன் வகையைச் சார்ந்தது ஆகும். இவ்வகையான மரங்கள் குருத்தில் காணப்படும் கிளியரன் கைமா என்ற ஒரு திசு இருப்பதினால் இதன் வளர்ச்சியை ஒரே நேர்வாக்கில் வானத்தை நோக்கி அமைகிறது. இதன் காரணத்தினால் பக்க கிளைகள் உருவாவதில்லை. இது போன்ற நிகழ்வுகள் ஏதாவது ஒரு மரத்தில் நாம் காண்பது வழக்கம்.

இது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் உள் ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஆராயும் பொழுது லண்டனைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி ப்ளேட்டர் என்பவர் 1926ம் ஆண்டில் ஒரு கட்டுரையில் கூறியதாவது, பொதுவாக தென்னை மரங்களில் இடி விழும் பொழுது தென்னை மரத்தின் உடைய குருத்து பாதிக்கப்பட்டு குருத்தில் இருந்து பக்கவாட்டு கிளைகள் உருவாகும் இதனை திடீர் மாற்றம் என்றும் அழை ப்பார்கள் . இதனால் சில சமயத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஒருவித்திலை தாவரங்களிலும் பக்கவாட்டுக் கிளைகள் நாம் பார்ப்பது அரி தான ஒன்றாகும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.