மீண்டும் அவதூறு வழக்கு.. இந்த முறை ஆர்எஸ்எஸ்.. 12ம் தேதி விசாரணை.. ராகுலுக்கு அடிமேல் அடி.!

ராகுல் காந்தி மீது மீண்டும் அவதூறு வழக்கு

முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக அவர் கருத்து தெரிவித்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்தமுறை ஆர்எஸ்எஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியாவின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் பதாரியா வழக்கு பதிவு செய்தார். ஜனவரி 9, 2023 அன்று ஹரியானாவின் அம்பாலாவில் பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு தெரு முனை கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் “21 ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள்” என்று கூறினார்.

“கௌரவர்கள் யார்? நான் முதலில் உங்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின் கௌரவர்களைப் பற்றி சொல்கிறேன். அவர்கள் காக்கி அரைக்கால் டவுசர் அணிந்து, கையில் லத்தியை ஏந்தி, ஷாக்காக்களை நடத்தி வருகிறார்கள்; இந்தியாவின் 2, 3 பெரும் தொழிலதிபர்கள் கௌரவர்களுடன் நிற்கிறார்கள்,” என்று ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்.-ஐ குறிப்பிட்டு பேசினார். அதைத் தொடர்ந்து இன்று அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சிறைதண்டனை

மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றார்கள் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மீது குஜராத் முன்னாள் அமைச்சர் ஓபிசி மக்களை அவமதித்து விட்டதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்தசூழலில் கடந்த 23ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

திருப்பதி: கோடைகாலத்தில் குளு குளு ஆஃபர்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு எம்பிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. மேலும் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடதக்கது.

அதானி விவகாரம்

ஆனால் அதானி முறைகேட்டில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதால், அவரை முடக்க ஒன்றிய பாஜக முடிவு செய்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதியை மாற்றி பாஜக சார்பு நீதிபதியை வைத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

“நான் இந்தியாவின் குரலுக்காகப் போராடுகிறேன், அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தகுதி நீக்கத்திற்குப் பிறகு தனது முதல் எதிர்வினையாக இந்தியில் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.