ரம்ஜான் சிந்தனைகள்-10| Ramadan Thoughts-10 | Dinamalar

உழைப்போம்! உயர்வோம்!

குடும்பத்திற்கு சுமையாக இளைஞர்கள் இருக்கக் கூடாது. பெற்றோர்கள் இளைப்பாறிக் கொள்ளும் சுமை தாங்கியாக இளைஞர்கள் மாற வேண்டும். படிப்பு முடிந்ததும் கிடைத்த சம்பளத்தில் பணியில் சேர்வதற்கு இளைஞர்கள் துணிய வேண்டும். ‘இந்த வேலைக்குத் தான் நான் செல்வேன்’ என்று சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தக் கூடாது. படிக்கும் காலத்தில் பணத்தட்டுப்பாடு இருந்தால் பெற்றோர் மீது கோபமோ, வருத்தமோ கொள்ளாமல் பகுதி நேரப் பணிகளுக்குச் சென்று படிப்புச் செலவையும் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாபாரத்தில் ஈடுபடுவோர் நேர்மையும், உண்மையும் கொண்டவராக இருக்க வேண்டும். நியாயம், தர்மத்தையும் தங்களின் கண்களாக போற்ற வேண்டும். உழைப்பு பற்றிச் சொல்லும் போது, ”எந்த மனிதனும் தனது கைகளால் உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. ஒருவன் தன் கையால் உழைப்பது என்பது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம்” என்கிறார் நபிகள் நாயகம். இதைப் பின்பற்றி குடும்ப பாரத்தை தாங்கும் வகையில் இளைஞர்களும், நேர்மையை லட்சியமாகக் கொண்டு வியாபாரிகளும் செயல்பட வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:36 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:24 மணி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.