உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என நபிகள் நாயகம் ஒருமுறை தோழர்களுக்கு அறிவுரை கூறினார்.
”ஒரு பெண் பூனை ஒன்றை வளர்த்தாள். அதை சுதந்திரமாக திரிய அனுமதிக்க மாட்டாள். பட்டினி போட்டு கொடுமை செய்வாள். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட அவளின் வாழ்வு முடிவுக்கு வந்தது. அப்போது அவள் நரகத்தில் துன்பத்திற்கு ஆளானாள். அதே சமயம் பாலைவனத்தில் பயணம் செய்த ஒரு மனிதர் தாகமுடன் நாய் ஒன்று கிடந்ததைக் கண்டார். இரக்கமுடன் தன்னிடம் இருந்த தண்ணீரை அதற்கு புகட்டினார். இந்த ஒரே ஒரு நற்செயலால் இறந்த பின் சுவனத்தில் வாழும் பேறு பெற்றார்” என்றார்.
இறைவன் தினமும் இரண்டு வான துாதர்களை பூமிக்கு அனுப்புகிறான். இவர்களின் பணி என்ன தெரியுமா. நல்லவர்களைக் கண்டதும் ஒரு துாதர், ”இறைவா… நற்செயலில் ஈடுபடும் இவருக்கு நன்மையை வழங்கு” என சிபாரிசு செய்வார். இன்னொருவர் தீயவர்களைக் கண்டறிந்து அவர்களை நோக்கி, “இறைவா… தீயவர்களுக்கு அழிவைக் கொடு” என்பார்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:42 மணி
Advertisement