‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் இதெல்லாம் தேவையா?: பொம்மை துப்பாக்கி வெடித்ததால் மணமகள் பீதி

மும்பை: ‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் பொம்பை துப்பாக்கியை பயன்படுத்திய மணமகளின் மீது வெடித்தால் அவர் பீதிடைந்தார். திருமண நிகழ்ச்சிகளில் போட்டோ ஷோ நடத்துவதற்காக விதவிதமான ‘ஸ்டண்ட்’ செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மஹாராஷ்டிராவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனும், மணமகளும் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். பொம்மை துப்பாக்கி என்பதால், அந்த துப்பாக்கியின் பட்டனை ஆன் செய்ததும் அதிலிருந்து பட்டாசு தீப்பொறிகள் பறந்தன. தீவிரமான வெடி பொருளாக இல்லாவிட்டாலும் கூட, அதன் வண்ண ஒளி பலரையும் கவர்ந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக மணமகளின் இருந்த துப்பாக்கி திடீரென வெடித்தது.

அதில் இருந்து வெளியேறிய புகை, மணமகளின் முகத்தில் பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த மணமகள், துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு அலறினார். மணமகனும் என்ன செய்வதென்றே தெரியாமல், மணமகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். விழாவிற்கு வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோவை அதிதி என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 13 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளிடம் இருந்து நிறைய எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.