சென்னை: இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏஆர் ரஹ்மான்.
ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஏஆர் ரஹ்மானை அவரது மகன் அமீன் வெட்கப்பட வைத்துள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
பிஸி ஷெட்யூலில் ஏஆர் ரஹ்மான்
ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் இசை ராஜாங்கம் வருகிறார். இந்தாண்டு சிம்புவின் பத்து தல திரைப்படம் மூலம் தனது கணக்கை தொடங்கியுள்ளார். மார்ச் 30ம் தேதி வெளியான பத்து தல படத்தில் ஏஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

ஏஆர் அமீன் செய்த சேட்டை
பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள நினைவிருக்கா என்ற பாடலை ஏஆர் ரஹ்மானின் மகன் அமீன் பாடியுள்ளார். மெலடியாக உருவான இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரும் தந்தையை போலவே இசையமைப்பதிலும் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இருவரும் விமானத்தில் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த க்யூட் ஸ்மைல்
இந்த வீடியோவில் ஏஆர் ரஹ்மான் விமானத்தில் இருந்தபடி மியூசிக் கம்போஸ் செய்து வருகிறார். அதனை அமீன் வீடியோவாக எடுப்பது தெரிந்ததும் வெட்கத்தில் சிரிக்கிறார் ஏஆர் ரஹ்மான். இந்த வீடியோவை வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் ‘ஓ மறக்குமா நெஞ்சம்’ பாடலின் இசையோடு எடிட் பண்ணி ஷேர் செய்துள்ளார் ஏஆர் அமீன். ஏஆர் ரஹ்மானிடம் அவரது மகன் அமீன் விமானத்தில் வைத்து வீடியோ எடுத்து விளையாடும் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் 2
ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்து வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக லண்டன் சென்ற ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.