Manikandan – கடைசி விவசாயி.. அந்த தாத்தாவின் குடும்பத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாரா இயக்குநர் மணிகண்டன்?

சென்னை: Director Manikandan (இயக்குநர் மணிகண்டன்) கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவின் குடும்பத்துடைய தற்போதைய நிலை தெரியவந்திருக்கிறது.

காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட அவர் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

களம் அமைத்து கொண்டு விண்ட்

மணிகண்டன் 2010ஆம் ஆண்டு விண்ட் என்ற குறும்படத்தை இயக்கினார். அந்தப் படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் ஏகத்துக்கும் புகழவும் செய்தார். இதனையடுத்து மணிகண்டன் பிரபலமானார். இதற்கிடையே அவர் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு பள்ளியிலும் டிஜிட்டல் போட்டோகிராஃபியை முடித்தார்.

கவனம் ஈர்த்த காக்கா முட்டை

கவனம் ஈர்த்த காக்கா முட்டை

விண்ட் படம் ஏற்படுத்திக்கொடுத்த பிரபல்யத்தை அடுத்து காக்கா முட்டை என்ற திரைப்படத்தை இயக்கினார் மணிகண்டன். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்படுவதும் அதை வைத்து நடக்கும் அரசியல் உள்குத்துக்கள் என படம் பக்காவாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலிருந்து அவர் காக்கா முட்டை மணிகண்டன் என்றே அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆண்டவன் கட்டளையும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழின் முக்கிய படம் கடைசி விவசாயி

தமிழின் முக்கிய படம் கடைசி விவசாயி

இவர் கடைசியாக கடைசி விவசாயில் படத்தை இயக்கி, தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. தமிழின் மிக முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று என மிஷ்கின் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். உசிலம்பட்டிக்கு நேராக சென்று மணிகண்டனுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தார் மிஷ்கின்.

நல்லாண்டி தாத்தா

நல்லாண்டி தாத்தா

படத்தின் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடப்பட்டாலும் அவைகளை எல்லாம் மீறி ஒருவர் பலரையும் ஈர்த்தார். அவர்தான் நல்லாண்டி. சொல்லப்போனால் படத்தின் ஹீரோவே அவர்தான். முதல் படமாக இருந்தாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத அவரின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் ரிலீஸ் ஆவதற்குள்ளேயே அவர் இறந்துவிட்டார். இந்தச் சூழலில் அவரது குடும்பம் இருக்கும் தற்போதைய நிலை குறித்து தெரியவந்திருக்கிறது.

குடும்பத்தின் நிலை என்ன?

குடும்பத்தின் நிலை என்ன?

புஹாரி ஜங்ஷன் என்ற யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நல்லாண்டியின் மகள், “என் அப்பா இறந்த பிறகு மூன்று வருடங்கள் கழித்து மணிகண்டன் உள்ளிட்டோர் வந்துசென்றனர். அதற்கு பிறகு அவர்கள் வரவே இல்லை. படம் ரிலீஸ் ஆன பிறகு படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். படம் ஓட ஓட பணம் கொடுப்போம் என்றனர் ஆனால் கொடுக்கவில்லை.

மணிகண்டன் அனுப்பிய ஆள்கள்

மணிகண்டன் அனுப்பிய ஆள்கள்

ஒருமுறை இயக்குநர் மணிகண்டன் ஆள்களை அனுப்பினார். அவர்களிடம் என்னவென்று கேட்டபோது மணிகண்டன் சார் அனுப்பிவைத்தார்.வீடு கட்டித்தருகிறோம் என்றார்கள். ஆனால் வீடு வேண்டாம் ஏற்கனவே வீடு இருக்கிறது. அதனால் பணமாக கொடுங்கள். என் தாயின் மருத்துவ செலவுக்கு உதவும் என்றேன். அவர்களும் சரி என்று போனார்கள். ஆனால் அவர்களிடமிருந்தும் தகவல் இல்லை.

என்னை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள்

என்னை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள்

மணிகண்டனுக்கு ஒரு முறை ஃபோன் செய்தேன். அப்போது நீங்கள் மணிகண்டன்தானே என்று கேட்டேன். இல்லை அப்படி யாருமே இங்கே இல்லை என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார்கள். ஆனால் அந்த நம்பர்தான் அவரது நம்பர் என்பது எனக்கு உறுதியாக தெரியும். வேண்டுமென்றே என்னை புறக்கணித்தார்கள். நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். படம் நடிக்கும்போது ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். அதையும் சில நாள்கள் கொடுத்ததில்லை.

உதவி செய்வார்கள் என்று நம்பிய நல்லாண்டி

உதவி செய்வார்கள் என்று நம்பிய நல்லாண்டி

அவரது மகளைத் தொடர்ந்து நல்லாண்டியின் பேத்தி பேசுகையில், “அவரை பிழைக்க வைப்பதற்கு எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது நடக்கவில்லை. படமெல்லாம் எடுத்து முடித்த பிறகு அவர் எங்களிடம் “ஒன்னும் இல்லம்மா பயப்படாதீர்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு ஆள்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் செய்வார்கள் என சொன்னார். ஆனால் யாருமே வரவில்லை. எங்கள் தாத்தாவை இழந்துவிட்டு அனாதையாக இருக்கிறோம்” என்றார் அழுதபடி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுமட்டுமின்றி நல்லாண்டியின் குடும்பத்துக்கு மணிகண்டன் தரப்பு உதவி செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.