Rashmika Mandanna: விஜய்யை பிரிந்து நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை காதலிக்கும் ரஷ்மிகா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Rashmika Mandanna dating Bellamkonda Srinivas?: தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை ரஷ்மிகா மந்தனா காதலிக்கிறார் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​விஜய் தேவரகொண்டா​ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. நாங்கள் காதலிக்கிறோம் என்று அவர்கள் கூறாவிட்டாலும் விஜய்யும், ரஷ்மிகாவும் காதலர்கள் தான் என அவர்களின் ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் பிரிந்துவிட்டார்களோ என பேச்சு கிளம்பியிருக்கிறது.​Rajinikanth: அம்பானி விழாவில் செம ஸ்டைலா, ஃபிட்டா இருந்த ரஜினி: தலைவருக்கு சுத்திப் போடுங்க

​பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்​மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ரஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்தார்கள். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றிலும் ஸ்ரீனிவாஸும், ரஷ்மிகாவும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவை பிரிந்துவிட்டதால் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை காதலிக்கிறார் ரஷ்மிகா என ரசிகர்கள் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

​காதல்​Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை எப்படி?: திருமாவளவனின் ஸ்பெஷல் விமர்சனம்ரஷ்மிகா, ஸ்ரீனிவாஸுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, தற்போது எல்லாம் ரஷ்மிகாவும், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும் ஜோடியாக வெளியே வருகிறார்கள். அதனால் மக்கள் அவர்களை பற்றி பேசுகிறார்கள். ரஷ்மிகாவுக்கு ஸ்ரீனிவாஸை மிகவும் பிடித்திருக்கிறது. அவருக்கும் அப்படித் தான். அதனால் அவர்கள் காதலிக்கும் வாய்ப்பு அதிகம் என்றார்.

​கவலை​ரஷ்மிகாவும், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும் காதலிப்பது உறுதியாகவில்லை. இருப்பினும் இந்த ஜோடி சூப்பராக இருக்கிறது என்கிறார்கள் ரஷ்மிகாவின் ரசிகர்கள். ஆனால் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் தான் கவலை அடைந்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் சேர்ந்து கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தார்கள். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.
​என்னாச்சு?​விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் அண்மையில் தான் ஜோடியாக மாலத்தீவுகளுக்கு சென்று வந்தார்கள். அதற்குள் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது?. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் ரஷ்மிகாவுக்கு எப்பொழுது பழக்கம் ஏற்பட்டது என ரவுடி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
​வாரிசு​கெரியரை பொறுத்தவரை ரஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு படம் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் பெயருக்கு தான் ஹீரோயின் என வந்தார் ரஷ்மிகா. அவரின் காட்சிகளை நீக்கிவிட்டாலும் படம் நன்றாகத் தான் இருக்கும் என விமர்சனம் எழுந்தது. மேலும் ரஷ்மிகாவை ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள்.
​புஷ்பா 2​ரஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி வருகிறார். சந்தீப் வாங்கா ரெட்டியின் இயக்கத்தில் ரன்பிர் கபூருடன் சேர்ந்து அனிமல் இந்தி படத்தில் நடித்திருக்கிறார் ரஷ்மிகா. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸோ விவி விநாயக் இயக்கி வரும் சத்ரபதி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சத்ரபதி படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ஸ்ரீனிவாஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.