Keerthy Suresh: சில்க்காக மாறிய கீர்த்தி சுரேஷ்.. பயோபிக்கிற்கு ஏதும் அடி போடுறாரா.. செம போஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் போல போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நானியுடன் அவர் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.

தமிழில் மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சந்தோஷ களிப்பில்

நானி உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த தசரா திரைப்படம் இந்த வாரம் வெளியான நிலையில், முதல் வாரத்திலேயே உலகளவில் 70 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கஷ்டப்பட்டு கருப்பு மேக்கப் எல்லாம் போட்டு நடித்ததற்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் சந்தோஷ களிப்பில் உள்ளார்.

சாணிக்காயிதம் சொதப்பல்

சாணிக்காயிதம் சொதப்பல்

கடந்த ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு கடினமான காட்சிகளில் எல்லாம் தைரியமாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும், சாணிக்காயிதம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாத நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்காமல் சொதப்பியது.

சில்க் மாதிரியே போஸ்

சில்க் மாதிரியே போஸ்

தசரா திரைப்படத்திலேயே சில்க் ஓவியம் ரொம்பவே ரசிகர்களால் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த ஓவியத்தின் அருகே அதே போன்ற போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு Feeling it like Silk..
Had to run and get this one clicked before the set was taken down! As you all know, I had nothing to do with “Silku Baru”

பாருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

பாருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

சில்க் பார் செட்டை பிரிப்பதற்கு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இது, உங்களுக்கே தெரியும் மற்றபடி எனக்கும் சில்க் பாருக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்றும் தனது போஸ்ட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட புகைப்படத்துக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

சில்க் பயோபிக்கா

சில்க் பயோபிக்கா

நடிகை கீர்த்தி சுரேஷ் சில்க் அருகே போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் சாவித்ரியை தொடர்ந்து சில்க் பயோபிக்கிலும் நடிக்கப் போறீங்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே நடிகை வித்யா பாலன் டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க்காகத் தான் நடித்திருந்தார் என்றும் நீங்க உங்க ஸ்டைலுக்கு ஒண்ணு பண்ணுங்க பார்க்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.