சென்னை: விஜய்யின் தளபதி 67 தற்போது லியோ என்ற டைட்டிலில் வேகமாக உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
லியோ காஷ்மீர் ஷெட்யூல்
விஜய் நடித்துவரும் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சில தினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது. உடனடியாக காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய லியோ படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகி வருகின்றனர். காஷ்மீர் ஷெட்யூல் முடிந்ததும் அங்கு நடைபெற்ற லியோ படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், விஜய் உட்பட மொத்த படக்குழுவும் கடுமையான குளிரை பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்திருந்தனர்.

அடுத்த ஷெட்யூல் ஆந்திராவில்
இன்னும் 60 நாட்கள் தான் லியோ படத்தின் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்து லியோ அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை, ஆந்திரா பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். சென்னையில் முடிந்ததும் உடனடியாக ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.

விஜய் போட்ட கண்டிஷன்
சென்னையில் லியோ படப்பிடிப்புக்காக செட் போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆந்திராவில் அவுட்டோர் ஷூட்டிங் நடத்தலாம் என லோகேஷ் ப்ளான் செய்து வைத்திருந்தாராம். ஆனால், இதனை கேள்விப்பட்ட விஜய், இனி அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம், ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி அல்லது வேறு எதாவது ஒரு இடத்தில் செட் போட்டு எடுத்துக்கலாம் எனக் கூறியுள்ளாராம். காஷ்மீரில் அவுட்டோர் ஷூட்டிங் நடத்த ரொம்பவே கடினமாக இருந்துள்ளது. அதனை வைத்தே இனி அவுட்டோர் ஷூட் வேண்டாம் என கண்டிப்பாக கூறியுள்ளாராம்.

லோகேஷ் சம்மதம்
விஜய் கூறிய காரணங்களைக் கேட்ட லோகேஷ், அதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதனால் இனிமேல் லியோ ஷூட்டிங் செட் போடப்பட்டு தான் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக லோகேஷின் வேண்டுகோளை ஏற்று லியோ படத்திற்காக விஜய் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர டாப் ஹீரோக்கள் யாரும் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.