ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். இதற்காக அவர் குஜராத் மாநிலம் சூரத்துக்கு வருகை தர இருக்கிறார். 2019 -ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி என்ற பெயர் குறித்து அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது. அது தொடர்பான வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தன்னை விதிக்கப்பட்டதும் அதனை தொடர்ந்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது!