ஸ்டாலின் எடுத்த முடிவு? மேலிட உத்தரவால் அமைச்சர்கள் அதிருப்தி!

மகளிர் உரிமைத் திட்டம் கலைஞர் நூற்றாண்டான 2023ஆம் ஆண்டில் திராவிட மாதமான செப்டம்பரில் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இந்த திட்டத்துக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏழு மாதங்களுக்கு 7000 கோடி ரூபாய் எனும் போது ஒரு கோடி பயனர்கள் பயன்பெறுவது உறுதியாகியுள்ளது.

அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று இப்போது கூறுவதால் விமர்சனங்கள் எழுந்தாலும் திட்டமிட்டபடி ஒரு கோடி பேருக்கு முறையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டாலே பெரியளவில் சமூகத்தில் மாற்றம் வரும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்கிறார்கள். பொருளாதார வல்லுநர் குழுவும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

அரசு ஏற்கெனவே நிதி சுமையில் தள்ளாடிவரும் நிலையில் 7000 கோடி ரூபாயை இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதால் வேறு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்க வேண்டாம் என்று பிற துறை அமைச்சர்களுக்கு வாய் மொழி உத்தரவு போயுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மக்களவைத் தேர்தலில் வாக்குகளாக மாறி திமுகவுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்பதும் திமுக தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் வேறு புதிய திட்டங்களுக்கு நோ சொல்லப்பட்டுள்ளதால் பிற துறை அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.