காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 30 பேரை கொல்லப் போவதாக காஷ்மீரை சேர்ந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ (டிஆர்எப்) என்ற தீவிரவாத குழு பட்டியல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பினாமி அமைப்பாக டிஆர்எப் கருதப்படுகிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசுதடை விதித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது அகண்ட பாரதம் குறித்த யோசனையை வெளிப்படுத்திய 3 நாட்களில் டிஆர்எப் இந்த மிரட்டலை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின்மூத்த அதிகாரி ஒருவர் நேற்றுகூறும்போது, “ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் முஸ்லிம் தலைவர்களை டிஆர்எப் அச்சுறுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.