ராக்ஸ்டார் ரமணியம்மாளுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அர்ச்சனா!

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சரிகமபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரமணியம்மாள், வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இவரது பாடும் திறமையை அறிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி 'சரிகமபா' நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்தது. தனது திறமையால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட ரமணியம்மாளுக்கு லட்சகணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். ரமணியம்மாளுக்கு செல்லமாக ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று செல்ல பெயரும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், 69 வயதான ரமணியம்மாள் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பதிவுகளில் ரமணியம்மாளுக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரிகமபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் 'என் அன்பிற்குரிய ரமணி அம்மா! உங்கள் குரல் என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்' என்று பதிவிட்டிருந்தார். அதோடு நிற்காமல் ரமணியம்மாள் வீட்டிற்கு நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.