ஹாய் மை டார்லிங்ஸ்.. எனக்கும் கஷ்டமான நாட்கள் வந்துருக்கு.. பிறந்தநாளில் தத்துவம் பேசிய ராஷ்மிகா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை எப்படி கொண்டாடினார், என்ன மாதிரியான ஆடை அணிந்தார். எவ்வளவு பெரிய கேக் கட் செய்தார். குறிப்பாக, யாருடன் கொண்டாடினார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எப்போதுமே தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்கள் பிறந்தநாளுக்கு ரசிகர்களை கண்டு கொள்வதே இல்லை.

ரசிகர்கள் கூடினாலே தங்களுக்குத் தொல்லை நடிப்பது மட்டும் எங்கள் தொழில், ரசிகர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமே இல்லை என சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், அதே பாணியில் தனது பிறந்தநாள் பிசியிலும் சில நிமிடங்களை ரசிகர்களுக்காக ஒதுக்கி இன்ஸ்டாகிராமில் சூப்பரான வீடியோ ஒன்றை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள் வீடியோ

அந்த வீடியோவில் ஹாய் மை டார்லிங்ஸ் என ஆரம்பித்து தனது அன்பை வெளிப்படுத்தும் ராஷ்மிகா மந்தனா, “இன்னைக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பதை விட நீங்களாம் எப்படி இருக்கீங்க என்பது தான் எனக்கு முக்கியம். எல்லோருமே சந்தோஷமா இருப்பீங்க என நினைக்கிறேன். சப்போஸ், ஒரு சிலர் வருத்தமாக இருக்கலாம். கஷ்டத்தில் இருக்கலாம். ஆனால், கவலைப்படாதீங்க.. நானும் அதே போன்ற சூழலில் சிக்கி இருக்கிறேன். ஆனால், எல்லாம் கடந்து போகும் என நம்புங்கள். நீங்கள் எப்போதுமே எனக்கு அன்பு செலுத்துறீங்க.. என் முழு அன்பும் உங்களுக்கு மட்டும் தான். இதே போலவே எப்போதும் நானும் ஹேப்பியா இருப்பேன், நீங்களும் ஹேப்பியா இருக்கணும்” என நீண்ட பிறந்தநாள் நன்றி மடலையே வீடியோவாக வெலியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பாலிவுட்டில் உருவாகி வரும் அனிமல் படத்தில் நடிக்க உள்ளார். அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படமும் வெளியாக உள்ளது. புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார் ராஷ்மிகா மந்தனா.

வீடியோவின் கடைசியில் ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ் எல்லாம் கொடுத்து லிட்டில் ஹார்ட்டை எல்லாம் காட்டி தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.