92 வயதில் ஐந்தாவது திருமணம்: நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்தார் கோடீஸ்வரர்…


கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர், தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.


ஐந்தாவது முறையாக திருமணம் 

பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார் அவர். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2023 நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 1,760 கோடி அமெரிக்க டொலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நான்கு முறை திருமணமானவரான Rupert, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், Ann Lesley Smith என்னும் பெண்ணை சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் 17ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது. விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.

92 வயதில் ஐந்தாவது திருமணம்: நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்தார் கோடீஸ்வரர்... | Fifth Marriage At 92

Photo: JEWEL SAMAD (Getty Images)

நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக திடீர் அறிவிப்பு

ஆனால், திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், தங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக Rupert தரப்பிலிருந்து திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Rupert திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்த Ann, ஆழ்ந்த மத நம்பிக்கைகள் கொண்டவர். தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசுவது அவர் வழக்கம்.

ஆனால், இப்படி தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக Ann பேசுவது Rupertக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆகவேதான் அவர் திடீரென தங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.