சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
இந்த நிலையில், சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்ட ரெயில் நிலையத்திலிருந்து 1 மணிக்கு கடைசி ரெயில் இயக்கப்படும் எனவும் 5-15 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.