டிசம்பர் 31ஆம் தேதி நமது புத்தாண்டு கிடையாது : நடிகை நமீதா பரபரப்பு வீடியோ..!!

2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமீதா . அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார்.

அத்துடன் ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலக்கினார். அதன் பின் இவர் கடந்த 2017-ம் ஆண்டு தமது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அரசியல் ஈடுபாட்டுடன் இயங்கி வந்த இவருக்கு கடந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

தற்போது பாஜக செயற்குழு உறுப்பினராக திகழ்ந்து வரும் நடிகை நமீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், “டிசம்பர் 31ஆம் தேதி நமது புத்தாண்டு கிடையாது; ஏப்ரல் 14 ஆம் தேதிதான் தமிழ் புத்தாண்டு, அதுதான் நமது புத்தாண்டு” என்று பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக நமீதா வெளியிட்டுள்ள வீடியோவில், “ஏப்ரல் 14 மிகவும் அருகாமையில் உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அதை கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு முழு நாளையும் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள். அதுதான் நம் கலாச்சாரம், அதுதான் நம் பாரம்பரியம். 31 டிசம்பர் நம்முடைய புத்தாண்டு கிடையாது, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது புத்தாண்டு! அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.‌

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.