நண்பா, சண்டனாலும் நேர்ல வந்துட்டியே… இதான் ஃபிரண்ட்ஷிப்… வந்தே பாரத் நிகழ்வில் மோடி நெகிழ்ச்சி!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பற்றி பிரதமர் மோடி பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அஜ்மரில் இருந்து டெல்லி வரையிலான அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். அதேசமயம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

கெலாட்டிற்கு பிரதமர் நன்றி

இதையடுத்து பேசிய பிரதமர், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியிலாக நிறைய சச்சரவுகள் நிலவி கொண்டிருக்கின்றன. இருந்த போதிலும் மாநில வளர்ச்சி திட்டத்திற்காக ரயில்வே துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வரவேற்கிறேன். கெலாட்டிற்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இரண்டு லட்டுகள்

உங்கள் இரு கைகளிலும் லட்டுகள் இருக்கின்றன. அதாவது, ரயில்வே துறை அமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். ரயில்வே வாரியத் தலைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே சில விஷயங்களை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யப்படவில்லை. இந்த சூழலில் நீங்கள் என் மீது நிறைய நம்பிக்கையை வைத்துள்ளீர்கள்.

இதுதான் நட்பு

இதன் காரணமாகவே இத்தகைய மேம்பாட்டு திட்டங்களை இன்று என்னால் செயல்படுத்த முடிந்தது. உங்களின் நம்பிக்கையே நமது நட்பின் வலிமையாக கருதுகிறேன். நம்முடைய நட்பில் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்ததை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். கிட்டதட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தனது நண்பராகவே கருதி பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உட்கட்சி பூசல்

இம்மாநிலத்தில் தற்போது
காங்கிரஸ்
ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் எதிரெதிர் துருவங்கள். இப்படிப்பட்ட சூழலில் இருகட்சிகளில் இருந்து நட்பு பாராட்டி பேசுவது அபூர்வமான விஷயம். ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்குள் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் புகார்கள்

வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று அசோக் கெலாட் மீது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதையொட்டி ஜெய்ப்பூரில் நேற்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இதனை கட்சி மேலிடம் விரும்பவில்லை. போராட்டம் எதுவும் வேண்டாம் என அறிவுறுத்தியது. ஆனால் சச்சின் பைலட் கேட்கவில்லை.

சச்சின் உண்ணாவிரதம்

நேற்று காலை 11 மணிக்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மாலை 4 மணி வரை நடத்தினார். இதில் சச்சின் பைலட் ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டனர். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான மோதல் புதிதல்ல. ஏற்கனவே பலமுறை சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் என்னென்ன அதிரடிகள் அரங்கேறுமோ என காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.