பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமான வில்லனாக மாறிவிட்டார்.இவர் விஜய்யின் ‘லியோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்..இந்நிலையில் சஞ்சய் தத்திற்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் இவர் கேடி படப்பிடிப்பில் இருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.குண்டுவெடிப்பு தொடர்பான கட்சியில் அவர் நடித்த போது எதிர்பாராமல் அவர் அருகிலேயே குண்டு வெடித்துள்ளது. இதானால் சஞ்சயின் முகம்,தலை ,மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்