நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், நாடுகள் என மன்னர்கள் அவற்றை அரசாண்டு வந்தார்கள். நாடு முழுவதும் இது போன்ற சமஸ்தானங்கள் அதிகமாக இருந்தன.
தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு பிரபலமான சமஸ்தானமாக இருந்தது புதுக்கோட்டை சமஸ்தானமாகும். தொண்டைமான் மன்னர்கள் பரம்பரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசிமன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டார்.அப்படி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது அவற்றில் ஆட்சி செலுத்தி வந்த ராஜாக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன.அப்படி இணைக்கப்பட்ட சமஸ்தானங்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை சமஸ்தானம்.
இந்நிலையில். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார்.உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராஜா ராஜ கோபால தொண்டைமானின் அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மக்கள் இன்னமும் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.