Vijay: விஜய், ஷாருக்கான், ராம் சரண் இடையே இருக்கும் 'காஸ்ட்லி ஒற்றுமை'யை கவனிச்சீங்களா?

?????????? ????????????? ???????- ?????? ????????????? ?????? ??????? ???????? ??? 50% ??? ???????? ??????????
Thalapathy Vijay, Ram Charan: விஜய், ஷாருக்கான், ராம் சரண் ஆகியோருக்கு இடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

​விஜய்​கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கம், அக்கட தேசத்தை சேர்ந்த ராம் சரணுக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது வேறு ஒன்றும் அல்ல. மூன்று பேருமே விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள். அதன் விலை ரூ. 10 கோடி.

​ரூ. 10 கோடிக்கு கார் வாங்கிய சூப்பர் ஸ்டார்

​காஸ்ட்லி​விஜய், ஷாருக்கான், ராம் சரணை தவிர வேறு எந்த பிரபலத்திடமும் ரோல்ஸ் ராய்ஸ் காரே இல்லையாக்கும் என கேட்க வேண்டாம். பிற பிரபலங்களிடமும் இருக்கிறது. ஆனால் விஜய், ஷாருக்கான், ராம் சரண் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தான் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். மற்றவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை அதை விட குறைவே.
​ஷாருக்கான்​பதான் படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த பிறகே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் ஷாருக்கான். அவர் வைத்திருக்கும் Rolls Royce Cullinan Black Badge காரின் எண் 5555. ஷாருக்கான் வைத்திருக்கும் அனைத்து கார்களின் எண்ணும் அது தான். தற்போது எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் ஷாருக்கான் மும்பையை வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

​Nayanthara:லியோ விஜய்யை அடுத்து சூப்பர் ஸ்டார், நயன்தாராவுக்கும் அதே பிரச்சனை: ரசிகர்கள் அதிர்ச்சி

​தளபதி​ஷூட்டிங்கில் இல்லாத நேரத்தில் தன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் ஜாலியாக சென்னையை வலம் வருவது விஜய்யின் வழக்கமாகும். சில நேரங்களில் படப்பிடிப்புக்கும் அந்த காரில் செல்கிறார். விஜய் ஓட்ட அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்ல வேண்டும் என்பது பிரபலங்களின் ஆசையாகும். அப்படி ஆசைப்பட்ட சிலரை தன் காரில் அழைத்துச் சென்று திக்குமுக்காட வைத்திருக்கிறார் விஜய்.
​ராம் சரண்​ராம் சரணிடம் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் கார் உள்ளது. அது மட்டும் அல்ல அவரிடம் பல விலை உயர்ந்த கார்கள் உள்ளன. ராஜமவுலி இயக்கத்தில் தான் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் ராம் சரண். மேலும் விரைவில் அப்பாவாகப் போகும் குஷியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​லியோ​Leo Vijay: விஜய் சொல்லியும் கேட்காத லோகேஷ் கனகராஜ்?: ச்சே, அப்படிலாம் இருக்காதுபாகெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஹைதராபாத் கிளம்புகிறது படக்குழு. ராம் சரணோ ஷங்கர் இயக்கத்தில் கேம் சேலஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானோ அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். ஜவானில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.